" alt="" aria-hidden="true" />
கொரோனா வைரஸ் பீதியால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்யாண உற்சவம் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோய் பீதியால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கோவிலில் தினமும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு நடந்து வந்த ஆர்ஜித சேவைகள் நேற்றில் இருந்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வாரத்தில் திங்கட்கிழமை அன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை நடக்கும் விசேஷ பூஜை, தினமும் வைபவ மண்டபத்தில் மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 3 மணிவரை நடக்கும் வசந்தோற்சவம், தினமும் மதியம் 2 மணியில் இருந்து 2.30 மணிவரை நடக்கும் ஆர்ஜித பிரம்மோற்சவம்.
தினமும் மதியம் 1 மணியில் இருந்து 2 மணிவரை நடக்கும் டோலோற்சவம், வாரத்தில் புதன்கிழமை அன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை நடக்கும் சகஸ்ர கலசாபிஷேகம், தினமும் மாலை 5 மணியில் இருந்து 5.30 மணிவரை நடக்கும் சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதில் தினமும் மதியம் 12 மணியில் இருந்து 1 மணிவரை நடக்கும் கல்யாண உற்சவம் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியின்றி அர்ச்சகர்களால் ஏகாந்தமாக நடத்தப்படுகிறது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
மேற்கண்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் திடீரெனசாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர். வி.ஐ.பி.பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்யவில்லை என்றால், அந்தப் பக்தருக்கான சம்பந்தப்பட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டை ரத்து செய்து, அதற்குரிய பணத்தை திருமலையில் உள்ள ஆர்ஜித சேவை டிக்கெட் கவுண்ட்டர்களில் ரீ-பண்டாக திரும்ப வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.